அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டவரைவை உடனே மீளப்பெறு! கொழும்பில் கொதித்தெழுந்த மக்கள்
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவுக்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிய சட்டவரைவுக்கு எதிராக எதிர்ப்பு
பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

கோட்டை தொடருந்து நிலைய சூழலில் திரண்ட போராட்டக்காரர்கள், அரசின் இந்தப் புதிய சட்டவரைவுக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியமையுடன், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த புதிய சட்டவரைவானது நாட்டின் சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக அமைப்பைக் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவித்த போராட்டக்காரர்கள், இந்த சட்டவரைவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை


