அடுக்கு மாடி குடியிருப்புகளில் நீண்டகாலம் வாழ்வோருக்கு முக்கிய தகவல்
கொழும்பு உட்பட பல இடங்களில் நீண்டகால தொடர் மாடி குடியிருப்புக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 40 வருடத்திற்கு மேற்பட்ட அனைத்து மாடி வீடுகளிலும் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்டட ஆராய்ச்சி அமைப்பு
அதன்படி சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்த தொழில்நுட்ப அறிக்கையை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளார்.
இதுபோன்ற கட்டிடங்கள் குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு அல்லது வேறு அரசு நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தி முறையான தொழில்நுட்ப அறிக்கையை பெறுவது சிறந்தது என அமைச்சகத்தின் செயலாளர் டி.எஸ்.சத்யானந்த குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மயிலை கிழி கிழி என கிழத்த குடும்பம், அடுத்து சீரியலில் நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதைக்களம் Cineulagam