கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கான தகவல்
கொழும்பு மாவட்டத்தில் காணி மதிப்பீட்டுச் சுட்டெண் கடந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் ஒப்பீட்டளவில் 7.1 வீத வளர்ச்சிப் பெறுமதியைக் காட்டியுள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டு சுட்டெண் வளர்ச்சி வருடாந்த அடிப்படையில் மந்தநிலையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை காணி மதிப்பீட்டுச் சுட்டெண் முறையே 8.8 சதவீதம், 6.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் ஆண்டு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
காணி மதிப்பீட்டுச் சுட்டெண்
2023இன் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, 2023இன் இரண்டாம் பாதியில் 2.1 சதவீத மிதமான வளர்ச்சியை காணி மதிப்பீட்டுச் சுட்டெண் பதிவுசெய்துள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், தொழில்துறை காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் மெதுவான அதிகரிப்பு மற்றும் வணிக மற்றும் குடியிருப்பு காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் மெதுவான அதிகரிப்பே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.