கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் நவீனமயமாகிறது!
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மெகா இன்ஜினியரிங் (MAGA Engineering (Pvt) Ltd) நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த திட்டமானது பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது.
மருதானை மற்றும் கொள்ளுபிட்டி (பம்பலப்பிட்டி பக்கம்) முனைகளில் தற்போதுள்ள பழைய நடைப்பாலங்கள் அகற்றப்பட்டு, புதிய நவீன நடைப்பாலங்கள் அமைக்கப்படும்.
புதிய பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர்கள்
புதிய நடைப்பாலங்கள் அனைத்தும் விசேட தேவையுடையோர் (Persons with special needs) இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும்.
நடைப்பாலங்களுடன் இணைக்கப்பட்ட புதிய பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர்கள் (Ticket Counters) உருவாக்கப்படும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று மாடிகளைக் கொண்ட நவீன சேவை கட்டிடம் (Three-storey service building) ஒன்று நிர்மாணிக்கப்படும்.
இத்திட்டத்திற்கான ஆரம்ப அமைச்சரவை அனுமதி 2025 ஜூன் 2 அன்று வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய போட்டி ஏல நடைமுறையின் (National Competitive Bidding) கீழ் தகுதியான நிறுவனமாக மெகா இன்ஜினியரிங் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam