வெள்ளப் பாதிப்புக்கு ஜனாதிபதியின் சொந்த நிதியில் இருந்து நட்ட ஈடு வேண்டும்! கம்மன்பில கோரிக்கை

Anura Kumara Dissanayaka Uthaya Gammanpila Floods In Sri Lanka Vraie Cally Balthazaar Flood
By Rakesh Nov 10, 2026 07:25 AM GMT
Report

கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், கொழும்பு மாநகர மேயர் விராய் கெய்லி பல்தசாரும் தமது சொந்த நிதியிலிருந்து நட்டஈடு வழங்க வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

"கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 35 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கக்கூடிய வடிகால் கட்டமைப்பில் 129 மில்லிமீற்றர் மழை பெய்தமையே காரணம் எனக் கொழும்பு மேயர் சாட்டுப் போக்குக் கூறியுள்ளார். ஆனால், கொழும்பில் இதற்கு முன்னர் இதைவிடப் பல மடங்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 1992 ஜூன் 4ஆம் திகதி 494 மில்லிமீற்றரும், 2010 நவம்பர் 10ஆம் திகதி 440 மில்லிமீற்றரும் பலத்த மழை பதிவாகியுள்ளது. அத்துடன் 2005 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் பல நாள்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

வெள்ளப் பாதிப்புக்கு ஜனாதிபதியின் சொந்த நிதியில் இருந்து நட்ட ஈடு வேண்டும்! கம்மன்பில கோரிக்கை | Colombo Floods Opposition Slams Anura Government

எனவே, மழைவீழ்ச்சியை மட்டும் காரணமாகக் கூறித் தப்ப முடியாது. கொழும்பில் முறைப்படி குப்பைகள் அகற்றப்படாமை, வடிகால்கள் மற்றும் சாக்கடைகள் துப்புரவு செய்யப்படாமல் அடைபட்டுள்ளமை, கால்வாய்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் மழைநீரை வெளியேற்றும் பிரதான நீரிறைக்கும் இயந்திரங்கள் பல மாதங்களாக இயங்காமல் பழுதடைந்துள்ளமை போன்றவையே இந்தப் பாரிய வெள்ளப்பெருக்குக்கான முதன்மை காரணங்களாகும்.

இவை தொடர்பான உண்மைத் தகவல்கள் மாநகர சபை வட்டாரங்களிலிருந்தே நேரடியாகக் கிடைத்துள்ளன.

கடந்த 2010ஆம் ஆண்டு கடும் மழையின்போது அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, குப்பைக் குவியல்களை உடனுக்குடன் அகற்றவும், கால்வாய்களைச் சீரமைக்கவும், சட்டவிரோத நிர்மாணங்களை இரக்கமின்றி அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுத்தார். இதனாலேயே கொழும்பு நகரம் தூய்மையான நவீன நகரமாக மாற்றப்பட்டது.

ஆனால், தற்போதைய 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டத்தின் கீழ் வடிகால்களையும் குப்பைகளையும் முறையாகப் பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரச அதிகாரிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கடுமையான அலட்சியப் போக்கால் பொதுமக்களுக்குப் பாரிய சொத்து இழப்புகள் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் தமது சொந்த நிதியிலிருந்தே நட்டஈடு வழங்க வேண்டும் என்பதே நாட்டின் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளிலும் வெளிப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடாகும்.

வெள்ளப் பாதிப்புக்கு ஜனாதிபதியின் சொந்த நிதியில் இருந்து நட்ட ஈடு வேண்டும்! கம்மன்பில கோரிக்கை | Colombo Floods Opposition Slams Anura Government

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பான வழக்குகளிலும் இத்தகைய தனிப்பட்ட பொறுப்புக்கூறல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாட்டைத் தூய்மைப்படுத்தும் முதன்மைப் பொறுப்பைக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், கொழும்பு நகரின் தூய்மை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்களைத் தடுக்கும் பொறுப்பைக் கொண்ட மேயர் விராய் கெய்லி பல்தசாரும் வெள்ளத்தால் தமது சொத்துக்களை இழந்த மக்களுக்குத் தமது சொந்தப் பணத்திலிருந்து நட்டஈடு வழங்க வேண்டும்.

அவர்களிடம் அதற்குரிய போதிய நிதி இல்லையெனில், நாட்டின் மிகப்பெரிய நிதியமாகக் கூறப்படும் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையக நிதியத்திலிருந்து அதனை வழங்க வேண்டும்.

மழை தெய்வத்துக்கு ஐந்து நாள்களில் 35 மில்லிமீற்றர் மட்டுமே மழை பெய்ய வேண்டும் என முன்கூட்டியே தந்தி அனுப்ப முடியாது. அடுத்த கனமழைக்கு முன்னராவது நகரத்தை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கத் தயார்படுத்துவதே ஒரு மேயரின் முதன்மைப் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று டொலர் விலையில் ஏற்பட்ட மாற்றம் : வங்கிகளின் புதிய விபரங்கள்!

இலங்கையில் இன்று டொலர் விலையில் ஏற்பட்ட மாற்றம் : வங்கிகளின் புதிய விபரங்கள்!

ட்ரம்பின் அறிவிப்பால் தொடர் விலை சரிவை சந்தித்துள்ள மசகு எண்ணெய்

ட்ரம்பின் அறிவிப்பால் தொடர் விலை சரிவை சந்தித்துள்ள மசகு எண்ணெய்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US