ஐரோப்பாவில் மீண்டும் உருவாகவுள்ள பனிப்போர் மேகம்
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளதால் ஐரோப்பா புதிய பனிப்போரை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதோ என்னும் அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
குறிப்பாக 1970களில் பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தது.
இந்நிலையில், "1950கள் மற்றும் 1960களில் இருந்த ஆரம்பகால பனிப்போர் சூழலை போலவே நாம் இப்போது மோசமான தருணத்தில் இருக்கிறோம்" என்று றோயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (Rusi) மற்றும் மாயக் உளவுத்துறையின் இயக்குநர் மார்க் கலியோட்டி குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரி அர்மின் பேப்பர்கர்
இருப்பினும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கும் மற்றும் பனிப்போர் கால கட்டத்தில் இரும்புத்திரையால் பாதியாகப் பிரிக்கப்பட்ட தேசத்திற்குப் இந்த புதுப்பிக்கப்பட்ட பனிப்போர் எப்படி இருக்கும்.
இந்நிலையில், ஜெர்மனியின் மிகப்பெரிய ஆயுத நிறுவனமான ரைன்மெட்டாலின் தலைமை நிர்வாகியைக் கொல்ல ரஷ்ய சதி செய்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ஜெர்மனியிடம் கூறியதாக கடந்த மாதம் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அப்போது அந்த செய்தியால் மிகப்பெரிய அதிர்வலைகள் உருவாகின. ஆனால் ரஷ்யா இந்த கூற்றை மறுத்தது.
எனினும், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் "ஒரு ஹைப்ரிட் ஆக்கிரமிப்புப் போரை நடத்துகிறது" என்று ரஷ்யாவைத் தாக்கி பேசினார்.
61 வயதான ரெயின்மெட்டால் (Rheinmetal) தலைமை நிர்வாக அதிகாரி அர்மின் பேப்பர்கர் உக்ரேனுக்கு ஆயுதங்களை மீண்டும் வழங்கவும் தங்கள் சொந்த பாதுகாப்பை அதிகரிக்கவும் பில்லியன்களை செலவிடும் நிலையில் இவர் முக்கியத்துவம் உள்ளவரா என்று சிந்திக்க வைக்கிறது.
ஜெர்மனி சான்சலர் ஓலாஃப் ஷூல்ஸ், பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சென் ஆகியோர் லோயர் சாக்சனி பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை பற்றி பேச அவர்களுடன் அர்மின் பேப்பர்கரும் நின்றார்.
அதன்போது தான் அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவரைக் கொல்வதற்கான சதி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், அது மேற்குலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கும்.
இராணுவ தளங்கள்
பாதுகாப்பு நடவடிக்கை குறைபாட்டால், ஜெர்மன் விமானப்படையின் மூத்த அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடல் உளவு பார்ககப்பட்டது.பின்னர் அது ரஷ்ய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
லுஃப்ட்வாஃபில் உள்ள ஒரு பிரிகேடியர் ஜெனரல், பாதுகாப்பற்ற தொலைபேசி இணைப்பை பயன்படுத்தியதால் உளவு பார்க்க வழிவகுத்தது. இது ஜெர்மனிக்கு கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது நடந்து சில வாரங்களுக்குப் பின், பவேரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை நாசப்படுத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு ஜெர்மன்-ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் ரஷ்ய தூதரை வரவழைத்து "பயங்கரவாதத்தை ஜெர்மனிக்கு கொண்டு வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டார்.
ஜெர்மனி அரசியல் கட்சிகள்
ரஷ்யா - ஜெர்மனி இடையே பால்டிக் கடலுக்கு அடியில் உள்ள நார்ட் ஸ்ட்ரீம் (Nord Stream blasts) எரிவாயுக் குழாய் 2022 இல் தகர்க்கப்பட்டது.
சமீப ஆண்டுகளில் ஜெர்மனியைப் பாதித்த மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்த ஊகங்கள் அன்றிலிருந்து எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் தற்போது அந்த சம்பவம் தொடர்பாக உக்ரேனிய டைவிங் பயிற்றுவிப்பாளரைக் கைது செய்ய ஜெர்மனி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பிரான்சில் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நாட்டின் அதிவேக ரயில் வலையமைப்பை குறிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர்களாக இருந்தனர்.
நார்ட் ஸ்ட்ரீம் தகர்புக்கு உக்ரேனிய முகவர்களே காரணம் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இது ஜெர்மனியில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் புதிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தீவிர வலதுசாரி ( AfD) கட்சியின் தலைவரான ஆலிஸ் வீடல், உக்ரேனுக்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும் மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை உக்ரேன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எனினும், பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில், ஜெர்மன் அரசாங்கம் முக்கியமான உள்கட்டமைப்பு பிரச்சினைகளை சரிசெய்யும் நோக்கத்தில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி வருகிறது. "அனைத்து பகுதிகளிலும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள்" இருக்க வேண்டும் என்று ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர் கூறுகிறார்.
நீண்ட தூர ஏவுகணைகள்
கிரிட்டிஸ் அம்ப்ரெல்லா சட்டத்தின் கீழ் (Kritis Umbrella Act) போக்குவரத்து மற்றும் நீர் போன்ற முக்கியமான துறைகளில் செயல்படுபவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு தரங்களைப் பின்பற்ற வேண்டும். இது ஜெர்மனியில் வகுக்கப்படும் முதல் பெடரல் சட்டம், ஆனால் போரைச் சுற்றி அதிக பதற்றங்கள் இருந்தபோதிலும் இன்னும் இறுதி ஒப்புதல் பெறப்படவில்லை.
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கவச மோர்ட்டார் வாகனங்கள் ரஷ்ய எல்லைக்குள் யுக்ரேன் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2026 முதல் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை தனது மண்ணில் நிலைநிறுத்த ஜெர்மனி ஒப்புக் கொண்டிருப்பதும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய போது, ஜெர்மனி சான்சலர் ஷூல்ஸ், `ஜெய்டென்வெண்டே’ (Zeitenwende) அதாவது தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், ஜெர்மனி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பல ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் குறைவாகவே முதலீடு செய்யும் போக்கை மாற்றியமைக்கவும், ஜெர்மனியின் துயரமான கடந்த காலத்தால் ஏற்பட்ட காயத்தை மாற்றுவதற்கும் நேரம் எடுக்கும் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.
சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஜெர்மனி இந்த நிகழ்வுகளுக்கு எவ்வளவு காலம் எடுத்து கொள்ளும் என்ற கேள்விக்குறி எழுகின்றது.
பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவது பற்றி மட்டுமல்ல, இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதும் உளவுத்துறையை மேம்படுத்துவதும் இதில் அடங்கும் என்று மார்க் கேலியோட்டி கூறுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |