கிளிநொச்சியில் தீயில் எரிந்து சேதமான தும்புத் தொழிற்சாலை
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(07.02.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் 35 இலட்சத்துக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பளுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு தடவைகள் மின் இணைப்பு கம்பியில் சேதாரம் ஏற்பட்ட நிலையில் அதனை
மின்சார சபையினர் முறையாக திருத்தாமையே மின்னொழுக்கு ஏற்பட காரணம் என தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
