அணு ஆயுதங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க தயாராகும் ரஷ்யா
ரஷ்யாவில் உயர்நிலை பாடசாலை வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அணு ஆயுத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் கற்பிக்கப்பட இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"தாய்நாட்டை பாதுகாக்கும் அடிப்படைகள்" எனும் பாடத்தின் கீழ் போரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்நாட்டு கல்வித்துறை சார்ந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆயுதங்களின் திறன்
இந்த பயிற்சியின் கீழ், உக்ரைனுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் திடீரென அணு ஆயுத போராக மாறும் பட்சத்தில் மாணவர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் பேரழிவு ஆயுதங்களின் திறன் மற்றும் அவற்றின் சேதப்படுத்தும் விளைவுகள், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் கற்றுக் கொள்வர்.
இதுமட்டுமன்றி அடிப்படை இராணுவ பயிற்சி, கலாஷ்நிகோவ் ரைஃபிள், கையெறி குண்டுகளை எப்படி கையாள வேண்டும் என்பதும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
