நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது
வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான காலநிலையே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேங்காய் தட்டுப்பாடு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
மார்ச் முதல் ஜூன் வரை, நாட்டில் அதிக வெப்பநிலை உயர்வு மற்றும் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு உகந்த வெப்பநிலை 27-28 சென்டிகிரேட் வெப்பநிலையாகும்.
தென்னை விளைச்சல்
ஆனால், 33 சென்டிகிரேடுக்கு மேல் செல்லும் போது, தென்னை மரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைந்து, காய்க்கும் தன்மை குறைகிறது.
உலகிலேயே அதிக தேங்காய் பாவனையை கொண்ட நாடாக இலங்கை உள்ளது, ஒருவர் வருடத்திற்கு 114 தேங்காய்களை உட்கொள்கின்றார்.
மேலும், தற்போதைய தென்னை விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தென்னை மரங்கள் நடுவதை அதிகரிக்க வேண்டும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |