இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிட திட்டம்
இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப நிகழ்ச்சி கடந்த 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தென்னங்கன்றுகள்
அதன்படி, வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் சுமார் ஒரு மில்லியன் தென்னங்கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு இளநீரின் விலை 300 ரூபாவைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும், சந்தையில் ஒரு தேங்காய் விலை 200 ரூபாயைத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
