ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற 317 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பெருள் பறிமுதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் $317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாகும்.
தலைநகர் மன்ரோவியாவிற்கு கிழக்கே உள்ள டுவாசோன் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், 3,971 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
இருவர் கைது
அட்டைப்பெட்டிகள் மற்றும் பயணப் பைகளில் 'கோகோ' மற்றும் 'போஸைடான்' எனக் குறியிடப்பட்டு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஸ்பெயின் மற்றும் கொலம்பியா நாடுகளின் கடவுச்சீட்டுகளையும், மற்றொருவர் செர்பிய நாட்டின் கடவுச்சீட்டையும் வைத்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு கொக்கைன் கடத்துவதற்குப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒரு முக்கிய இடைத்தாவளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதமும் மன்ரோவியா விமான நிலையத்தில் $19 மில்லியன் மதிப்பிலான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களின் பாதைகளை மாற்றி, பெருமளவிலான போதைப்பொருட்களை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சேமித்து வைத்து கடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan