நிலக்கரி இழப்பையும் டீசல் மானியத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தக் கூடாது! அமைச்சர் விளக்கம்

Sri Lankan Peoples Petrol diesel price Anura Karunathilake
By Rakesh Oct 17, 2026 05:05 AM GMT
Report

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும், தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நிர்வாக இழப்பையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது என்று எரிசக்தி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16.10.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் நுகர்வோர்

மேலும் தெரிவிக்கையில், "உலகச் சந்தையிலும் உள்நாட்டிலும் டீசல் விலை அதிகரித்ததால் மின் உற்பத்திக்கான செலவு கணிசமாக உயர்ந்தது. இதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்குச் சுமை ஏற்படுவதைத் தடுக்கவும் அரசு 15 பில்லியன் ரூபாவை மானியமாக வழங்கியது.

நிலக்கரி இழப்பையும் டீசல் மானியத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தக் கூடாது! அமைச்சர் விளக்கம் | Coal Losses And Diesel Subsidies Not Linked

குறிப்பாக, மாதத்துக்கு 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறும் நுகர்வோரின் மின் கட்டணத்தை உயர்த்தாமல், கூடுதல் செலவை அரசே ஏற்றுக்கொண்டது.

நாட்டில் நிலக்கரிப் பிரச்சினை இல்லாதிருந்தாலும் கூட, சர்வதேச விலை ஏற்றத்திலிருந்து எளிய மக்களைப் பாதுகாக்க இந்த மானியத்தை அரசு வழங்கியே தீர வேண்டியிருந்திருக்கும்.

தனியார் எரிபொருள் நிலையங்கள் 

நாட்டில் ஆரோக்கியமான சந்தைப் போட்டியை உருவாக்குவதற்காகச் சில தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக உரிமம் வழங்கப்பட்ட போதிலும், அதிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட பலன் கிடைக்கவில்லை.

நிலக்கரி இழப்பையும் டீசல் மானியத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தக் கூடாது! அமைச்சர் விளக்கம் | Coal Losses And Diesel Subsidies Not Linked

நெருக்கடியான சூழலில் தங்களது இலாப வரம்புக்கு ஏற்ப விலை அமையாதபோது, சில தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முற்படுகின்றன.

சில தொலைதூரப் பகுதிகளில் தனியார் எரிபொருள் நிலையங்கள் மட்டுமே இருப்பதால், பொதுமக்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனைச் சமாளிக்கும் வகையிலும், தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும், சட்ட ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு புதிதாக 75 எரிபொருள் நிலையங்களை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக சக்திவாய்ந்த பெண் சபாநாயகர்! திரைமறைவில் இரகசிய திட்டம்

வரலாற்றில் முதன்முறையாக சக்திவாய்ந்த பெண் சபாநாயகர்! திரைமறைவில் இரகசிய திட்டம்

கொழும்பை மிரட்டிய பிக்குகள் உட்பட 56 பேருக்கு ஆபத்து - அநுரவின் இறுதி முடிவும் வெளியானது

கொழும்பை மிரட்டிய பிக்குகள் உட்பட 56 பேருக்கு ஆபத்து - அநுரவின் இறுதி முடிவும் வெளியானது

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US