ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதல்! முதல்முறையாக நிராகரித்த ட்ரம்ப்
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இருப்பினும், "அனைத்து குண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் அமெரிக்காவின் மிகக் கொடூரமான அணு ஆயுதமல்லாத வழக்கமான குண்டை ஈரானின் மீது வீசுவது குறித்து தனது நிர்வாகம் ஆலோசித்து வருவதாக வெளிவந்த செய்திகளை அவர் மறுக்கவில்லை.
விரைவாகத் தாக்குதல்
"நான் அணுஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டேன். அதற்குத் தேவையும் இல்லை. உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய அணுஆயுத வல்லரசு" என நேர்காணல் ஒன்றின்போது ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
GBU-43/B வகை குண்டு குறித்து கருத்துரைத்த அவர், அது அணு ஆயுதம் அல்ல என்றும், ஆனால் மிகவும் பிரம்மாண்டமான வழக்கமான சக்திவாய்ந்த குண்டு என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள பிக்ஏக்ஸ் மலையின் கிரனைட் பாறைகளுக்குக் கீழே ஈரான் தனது அணுசக்தி மையங்களை மறைத்து வைத்திருப்பதாகக் நம்பப்படுகிறது.
தேவைப்பட்டால் அந்த மலையை இலக்கு வைத்து மிக விரைவாகத் தாக்குதல் நடத்தி அதை அழிக்க அமெரிக்கா பரிசீலிக்கலாம் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுக்குள் அமெரிக்கத் தரைப்படையினரை அனுப்புவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, இந்தத் தாக்குதலின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகாரமகா தேவி பூங்காவில் தஞ்சமடைந்த தேரர்களின் கூடாரங்கள் : நள்ளிரவில் திடீரென வந்த பொலிஸாரால் அகற்றம்