மக்களின் நடமாட்டத்துக்கு அனுமதித்தால் மீண்டும் கொத்தணிகள்உருவாகும்! - வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

india covid-19 covid death
By Rakesh Jun 01, 2021 11:17 PM GMT
Report

கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு இரு வாரக்காலம் முடக்கப்பட்டாலும் கூட நாட்டின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. மக்களின் நடமாட்டத்துக்கு அனுமதித்தால் மீண்டும் கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் உள்ளது என சுகாதார, வைத்திய நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைக்கவும் அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாராந்த கோவிட் ஆய்வுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் நாட்டின் மோசமான கோவிட் வைரஸ் பரவல் குறித்த ஆய்வொன்றை அரசிடம் சுகாதாரத் தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய நாடு தற்போது முடக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் வைரஸ் பரவல் குறைந்துள்ளதாகக் கருத முடியாது. எனவே, மக்களின் நடமாட்டம், அநாவசிய செயற்பாடுகள் காரணமாக மீண்டும் நாட்டில் கோவிட் கொத்தணிகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அரசுக்குச் சுகாதாரத் தரப்பினர் எடுத்துரைத்துள்ளனர்.

நாட்டைத் தொடர்ச்சியாக முடக்குவது அல்லது சகலருக்கும் தடுப்பூசிகளை ஏற்றுவது ஆகிய இரண்டு செயற்பாடுகளில் ஒன்றைக் கையாள வேண்டும் என்பதையும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

அயல் நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேலாக நாடு முழுமையாக முடக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் நாடு திறக்கப்பட்ட பின்னர் இன்று உலகிலேயே அதிக கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது.

எனவே, நாட்டை முடக்குவதால் மாத்திரம் கோவிட் வைரஸ் பரவலிலிருந்து தப்பிக்க முடியாது என்ற காரணிகளையும் அரசிடம் சுகாதாரத் தரப்பினர் எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் சகல மாவட்டங்களிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை உருவாக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவை உருவாக்கிக் கோவிட் தொற்று நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், தற்போதுள்ள நிலை தொடருமாயின் அடுத்த மாத நடுப்பகுதியில் அல்லது இறுதியில் நாளொன்றுக்கான தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டலாம். எனவே, இப்போதே சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாட்டைப் பாதுகாக்க ஏதுவாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து கவனம் செலுத்துவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவை உருவாக்கி பொதுமக்களுக்கான சிகிச்சைகளை வழங்கும் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார, வைத்திய நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US