நியாயமான விலையில் மின்சாரம் வழங்கும் வாய்ப்பு - அமைச்சரின் தகவல்

Anuradhapura Sri Lanka Electricity Prices Anura Karunathilake
By Mayuri Sep 18, 2026 12:25 PM GMT
Report

அதிகளவில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி தூய்மையான மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் நியாயமான விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்கும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் 40 மெகாவொட் மணிநேர மின்கல வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (18.09.2026) முற்பகல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனையும் மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், ஸ்டோர்எக்ஸ் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றலை பெருமளவில் பயன்படுத்தி,தூய்மையான வழியிலான மின்சார உற்பத்தி மற்றும் குறைந்த உற்பத்திச் செலவின் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசாங்கத்தின் நோக்கம்

வினைத்திறனான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கமாகும். உலகின் வலுசக்தித்துறையானது பல்வேறு காலகட்டங்களிலும்,பல்வேறு சந்தர்ப்பங்களிலும் திருப்புமுனைகளுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை நாம் அறிவோம். இலங்கையின் வலுசக்தித்துறை, குறிப்பாக மின்சாரத்துறையைக் கருத்திற்கொள்ளும்போது,இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.

நியாயமான விலையில் மின்சாரம் வழங்கும் வாய்ப்பு - அமைச்சரின் தகவல் | Government Plans Supply Electricity At Low Price

தற்போதைய அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில்இ நாட்டின் மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்படும் இந்த மாற்றமானது மிகவும் முக்கியமானதென நாம் நம்புகிறோம். நாம் ஏற்கனவே பகல் வேளையில் சூரிய சக்தியின் மூலம் சுமார் 3,000 மெகாவொட் அளவை உற்பத்தி செய்கிறோம். பகல் வேளையில் பொதுவாக 2,800 மெகாவொட் அளவிலான மின்சாரத் தேவையே உள்ளது. எனினும், இரவு வேளையில் நமக்கு 3,100 மெகாவொட் வரையான கேள்வி காணப்படுகிறது.

எல் நினோ நிலைமையுடன் சேர்த்து, ஒருவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அந்தத் தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய மின்சக்தியை சேமித்து வைக்கும் வசதி இதுவரை இல்லாதிருந்தமையே நமக்கு நிலவிய பிரச்சினையாகும். அந்தப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக நாம் தற்போது 160 மெகாவொட் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் 130 மெகாவொட் தொடர்பான பொறுப்பை வின்ட்போர்ஸ் நிறுவனம் ஏற்றுச் செயல்படுகிறது.

விலைமனுக் கோரல்

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் இந்த 160 மெகாவொட்டையும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நாம் நம்புகிறோம். அதேபோன்று, மேலும் 400 மெகாவொட், 250 மெகாவொட் மற்றும் 150 மெகாவொட் என மின்கல சேமிப்புக்கான இதே வகையிலான விலைமனுக் கோரல் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அவற்றில் சில மதிப்பீட்டு மட்டத்தில் உள்ளன. 2027 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர், பெரும்பாலும் முதல் 6 மாதங்களுக்குள், அந்தத் திட்டங்களையும் நமது மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நம்புகிறோம்.

நியாயமான விலையில் மின்சாரம் வழங்கும் வாய்ப்பு - அமைச்சரின் தகவல் | Government Plans Supply Electricity At Low Price

இதன் மூலம் ஒருபுறம் அதிக அளவிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடிவதுடன், மறுபுறம் இரவு வேளையில் அதிகளவில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படும் அதிக செலவைக் குறைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்பாக அமைகின்றது.

அதிகளவில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி தூய்மையான மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் நியாயமான விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும், திறமையான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குமான நமது அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்

மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்

ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப்பிரிவு

ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப்பிரிவு

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US