எரிபொருள் விலை நெருக்கடி: நாடு முழுவதும் 500 நிலையங்கள் ஆபத்தில்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Shadhu Shanker Sep 18, 2026 01:01 PM GMT
Report

இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த நிலைமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அங்கு Lanka IOC, Sinopec மற்றும் RM Packs உள்ளிட்ட எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

எரிபொருள் விலை நெருக்கடி: நாடு முழுவதும் 500 நிலையங்கள் ஆபத்தில் | Fuel Supply Crisis Looms As Foreign Oil Companies

வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் எரிபொருளை, அதனை இறக்குமதி செய்வதற்கான செலவைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் எரிபொருளை வழக்கமான முறையில் விநியோகிப்பதில் நிறுவனங்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலைமை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு மட்டுமன்றி, அன்றாடம் போதுமான எரிபொருள் கிடைக்காமல் சிரமப்படும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் கோரிக்கை

அரசுக்கு சொந்தமான இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் எரிபொருளை வழங்கி வருகின்றது.

ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வதால், அதிகளவான செயற்பாட்டு செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலை நெருக்கடி: நாடு முழுவதும் 500 நிலையங்கள் ஆபத்தில் | Fuel Supply Crisis Looms As Foreign Oil Companies

இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவது மேலும் சிக்கலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், எரிபொருள் விலையை ஒழுங்குபடுத்துவதற்காக சுயாதீனமான நிறுவனமொன்றை அமைக்குமாறு சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான எரிபொருள் விலையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

டுபாய் பிரியங்கரவின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கிய முன்னாள் கடற்படை சிப்பாய் கைது!

டுபாய் பிரியங்கரவின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கிய முன்னாள் கடற்படை சிப்பாய் கைது!

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US