சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Gajendrakumar Ponnambalam Vijitha Herath Saudi Arabia Crime
By H. A. Roshan Sep 18, 2026 10:15 AM GMT
Report

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அதனை இரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ தேவையான சட்டரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அனோஜனின் மரண தண்டனை

இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (18) காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sri Lankan Worker Anojan Sentenced Death Saudi

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான மிக முக்கியமான மனிதாபிமான விடயம் என்பதால், காலதாமதமின்றி அனைத்து சாத்தியமான சட்ட மற்றும் இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு இலங்கை இளைஞரின் உயிர் தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில், கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Sri Lankan Worker Anojan Sentenced Death Saudi

அனோஜனின் வழக்கில் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அமைச்சர் விஜித ஹேரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பில் 125 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

கொழும்பில் 125 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி

வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி

மேலதிக தகவல்- பவன்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US