நாடு முழுவதும் சீரான வானிலை!
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரான வானிலை
இவைதவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.