கரைச்சியில் Clean Sri Lanka திட்டத்தின் நடமாடும் சேவை
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று(24.12.2025) நடைபெற்று வருகின்றது.
குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில், ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள இலக்கம் 01 பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்த நடமாடும் சேவையில் பல்வேறு சேவைகள், பணிகள் மக்களுக்கு ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது.
ஒரே நாளில் பணிகள்
குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், வியாபார பெயர்ப் பதிவு தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள், சமய, கலாசாரப்பிரிவு தொடர்பான சேவைகள், சொத்தழிவு/காணாமல் போனோர் தொடர்பான சேவைகள், சமுர்த்தி கடன் சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், கமநல அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான சேவைகள், ஆயுள்வேத திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்,கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மின்சார சபை தொடர்பான சேவைகள், நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பான சேவைகள், தென்னைப் பயிர்ச் செய்கை சபை தொடர்பான சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையால் வழங்கப்படும் சேவைகள், ஏனைய திணைக்களங்களினால் வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணப்பதிவு
மேலும், இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த ஒரு தம்பதியருக்கு திருமண பதிவும் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர் இ. நளாஜினி, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அ. அஜிதா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்புச் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், நடமாடும் சேவையுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நடமாடும் சேவையானது ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையுடன், தொடர்ச்சியாக பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருவதோடு மக்களுக்கு ஒரே இடத்தில் அவர்களது பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan