இலங்கையின் அபாய பகுதிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கான மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அந்த பகுதிகளில் நிலவும் அபாயம் இன்னும் குறையவில்லை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
தற்போது மழைவீழ்ச்சி குறைந்துள்ளதால், சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அதிகாரிகள் வந்து சம்பந்தப்பட்ட அபாயப் பகுதிகளை ஆய்வு செய்யும் வரை மக்கள் அந்தப் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்ட எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கும் வரை, அபாய பகுதிகளுக்கு திரும்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, பதுளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam