அச்சுவேலியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் துப்புரவு பணிகள்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் துப்புரவு பணிகள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்று (09.03.2025) இடம்பெற்றுள்ளது.
துப்புரவு செய்யப்பட்ட வளாகம்
இதில் பிரதேச வைத்தியசாலையின் பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், அச்சுவேலி சிற்றூர்தி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர்கள் அச்சுவேலி பிரதேச சபையின் உதவியுடன் பிரதேச வைத்தியசாலையில் உள்ளக வளாகங்களை துப்புரவு செய்தனர்.
அத்துடன் வைத்தியசாலையின் வளாகத்தில் புதிய மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.














ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 15 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam