யாழ். நெல்லியடியில் மோதலில் ஈடுபட்ட 15 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்
யாழ். நெல்லியடி - இராஜ கிராமத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையிலான குறித்த மோதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் 15 பேரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவி வரும் கோவிட் தொற்று அச்சம் காரணமாகவே சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
