அங்குருவாதொட்டையில் மது விருந்தில் மோதல் - கூரிய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் பலி
அங்குருவாதொட்ட - படகொட பகுதியில் மது விருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
படகொட பகுதியில் நடந்த தாக்குதலில், அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உள்ளிட்ட மூவர் நேற்று(06.11.2026) பிற்பகல் படகொட பகுதியில் அமைந்திருந்த வீடொன்றில் மது விருந்து நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்த நபர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர் முச்சக்கர வண்டியொன்றில் கூரிய ஆயுதத்துடன் மது விருந்து நடைபெற்ற வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்துள்ளது.
நபர் உயிரிழப்பு
இதன்போது, சந்தேகநபர் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் உயிரிழந்தவரின் மார்புப் பகுதியில் தாக்கப்பட்டதில் அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த சந்தேகநபர், காயமடைந்த நபரை தனது முச்சக்கர வண்டியில் கல்பஹத்த வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அவரை ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாணந்துறை குற்றப்பிரிவு தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஹொரணை பதில் நீதவான் சம்பவ இடப் பரிசோதனையையும் மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அங்குருவாதொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.