பெட்டா பேருந்து நிலையத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு - மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் மக்கள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பில் வேலை செய்யும் மக்கள் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்காகப் புறக்கோட்டை பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக, அதிகளவிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் மக்களின் கருத்துக் கணிப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வழக்கமாக, கொழும்பில் வேலை செய்யும் மக்கள் பண்டிகைக் காலங்களில் வீடுகளுக்குத் திரும்பும்போது, போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், சிலர் பண்டிகை நாட்களில் வீடுகளுக்குச் செல்வதைக்கூடத் தவிர்த்து வந்தனர்.
ஆனால், அநுர அரசாங்கத்தின் முயற்சியால் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கம் தனது பணிகளை இவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கூடிய விரைவில் எரிவாயுத் தட்டுப்பாட்டையும் சீர்செய்து, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.