சிவில் அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் (Video)
சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கோரிக்கை அடங்கிய மகஜர் திருகோணமலை மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் திருகோணமலை மனித உரிமைகள்ஆணையகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிவில் அமைப்புகள் மீது அச்சுறுத்தல்
இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக வேலைகளில் கலந்து கொள்பவர்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.
சிவில் அமைப்பின் அலுவலகங்களுக்கும் சேதம்
அதுமட்டுமன்றி சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கியமான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
ஆகவே இவ்வாறான விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெறக் கூடாது என வலியுறுத்தி வடக்கு கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மகஜர் கையளிப்பும் இன்று (14.09.2022) இடம்பெற்றதோடு அதன் ஒரு பகுதியாக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
