ரணிலின் கைதினை முன்னரே அறிவித்த சமூக ஊடக செயற்பாட்டாளருக்கு எதிராக சிஐடியினர் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்பாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு துறை (CID) விசாரணையை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் தலைமை அதிகாரியின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட இந்த விசாரணை, குறித்த சமூக செயற்பாட்டாளர் வெளியிட்ட காணொளியை மையமாகக் கொண்டுள்ளது.
சிஐடியினர் விசாரணை
குறித்த காணொளியில் ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு துறைக்கு விளக்கமளிக்க வருகை தந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக சமீபத்தில் ஒரு தொழில்முறை குழுவினர் உத்தியோகபூர்வமாக முறைபாடு அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஒகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



