தன் நிலையை அன்றே கூறினாரா ரணில்..! அதிகம் பகிரப்படும் முகநூல் பதிவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட பதிவொன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.
குறித்த பதிவானது 2014.11.11 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், "ஒரு அரசனுக்கு என்ன திறமை இருந்தாலும், அவரது இராச்சியத்தின் மனிதர்கள் அரசாங்கத்தின் செல்வத்தைத் திருடி வீணடித்தால், அந்த மன்னன் அந்த பதவியில் இருக்கத் தகுதியற்றவன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச நிதி துஷ்பிரயோகம்
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி ரணில் முன்னதாக வெளிப்படுத்திய நற்சிந்தனை அவரது வாழ்விலும் ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
