ரணிலின் உடல்நிலை குறித்து மூன்று முன்னணி நாடுகளின் தலைவர்கள் விசாரணை!
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து மூன்று முன்னணி நாடுகளின் தலைவர்கள் விசாரித்துள்ளதாக ஐ.தே.க தரப்புகள் தெரிவிக்கின்றன.
ஐ.தே.க பொதுச் செயலாளர் வஜிர அபேவர்தனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
சில முக்கிய சர்வதேச மனித உரிமைக் குழுக்களும் ஐ.தே.க உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கான விவரங்களைக் கோரியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விக்ரமசிங்கவின் விடுதலை
நேற்று, விக்ரமசிங்கவின் விடுதலைக்காக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடுவதாக உறுதியளித்திருந்தனர்.
சில கட்சித் தலைவர்கள் நேற்று மதியம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது ஆதரவைக் கோரியுள்ளனர்.
எனினும், அதற்கு பிரேமதாச நேர்மறையாக பதிலளித்ததாக சிர அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் நேற்று மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் சந்தித்து தங்கள் கவலைகளைப் பற்றி ரணிலின் ஆதரவாளர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இன்று கொழும்புக்கு வரும் வருகை தரும் அமெரிக்க தூதுக்குழுவை ஐக்கிய தேசியக் கட்சி சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



