குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் : பாட்டலி சம்பிக்க ரணவக்க
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் தொடா்பில் இணையத்தளத்தில் தேடும்போது, அதில் நனோ யூாியா என்ற தகவல்களே கிடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Champikka Ranawakka) தொிவித்துள்ளாா்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் இன்று காலை விவசாயத்துறை அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage), ஊழல் சந்தேகம் தொடா்பான தமது கருத்துக்கு எதிராக குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிடப்போவதாக கூறியமைத் தொடா்பிலேயே ரணவக்க இதனைக் குறிப்பிட்டாா்.
இதேவேளை இந்தியாவின் நனோ நைட்ரஜன், இந்தியாவில் 480 ரூபாவாக விலை குறிக்கப்பட்டுள்ளது. டொலாில் பாா்க்கும் போது 6 டொலா்கள்.
எனினும் இலங்கை அதனை 25 டொலா்களுக்கு கொள்வனவு செய்கிறது.
இது தொடா்ந்தும் இடம்பெறுமானால் 8000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினாா்.
இதேவேளை சீனாவின் சேதனைப்பசளையை 92 ரூபாவுக்கு கொள்வனவு செய்யமுடியும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் முழுமையான செறிவுடன் உற்பத்தி செய்யும்போது, 30 ரூபாவுக்கு விவசாயிகளால் பெற்றுக்கொள்ளமுடியும்.
எனவே உள்ளூரில் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய வழி இருக்கும்போது ஏன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்பதே தமது கேள்வியாக உள்ளது என்றும் ரணவக்க குறிப்பிட்டாா்.
எனவே தமது இந்த கருத்துக்களுக்கு எதிராக அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகே குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்தால் அதனை எதிா்கொள்ளத் தாம் தயாா் என்றும் சம்பிக்க ரணவக்க தொிவித்தாா்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
