தாமரை கோபுரத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! அனுமதி தொடர்பில் வெளியான தகவல்
சுற்றுலா அமைச்சினால் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் இணைந்து "கிறிஸ்துமஸ் கொழும்பு - தாமரை கோபுரம்" என்னும் தலைப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாமரை கோபுர வாகன தரிப்பிடத்திலே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் பங்குப்பற்றக்கூடிய வசதிகள் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பண்டிகை நிகழ்ச்சிகள்
இக்காலப்பகுதியில், முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் போன்ற ஒரு உணவு அரங்கம், ஒரு விற்பனையாளர் சந்தை, குளிர்பானக் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு, நேரடி இசைக்குழுக்களை கொண்டதாக இதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இப்பண்டிக்கை கொண்டாட்டம் டிசம்பர் 20 முதல் 28, 2022 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நுழைவு இலவசம்
இந்த பண்டிகை நிகழ்ச்சியானது அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரே வளாகத்தில் பல இடங்களைக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அனுபவமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"கிறிஸ்துமஸ் கொழும்பு" நுழைவு இலவசம் மற்றும் தாமரை கோபுரத்தை பார்வையிடும் எவரும் நிகழ்விற்கு இலவச அணுகலைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் இசைக்குழுகளின் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிஸ்டி (டிசம்பர் 20),
கால் தடம் (21),
கடற்படை மற்றும் இராணுவம் (22),
குரும்பா (23), விமானப்படை (24),
பொலிஸ் (25),
பில்லி பெர்னாண்டோ (26),
ரொமேஷ் (27) மற்றும் லைன் ஒன் (28)