துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன வாகனங்கள் மோட்டார் திறன்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, துறைமுகத்தில் கிட்டத்தட்ட 1000 சீனத் தயாரிப்பு BYD மின்சார வாகனங்களை இலங்கை சுங்கத்திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இறக்குமதி வரிகளை நேரடியாகப் பாதிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த வாகனங்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மோட்டார் திறன்
இந்த மாதம் ஆறு தடவைகளாக இறக்குமதி செய்யப்பட்ட குறித்த ரக வாகனங்கள் அனைத்தும் 100 கிலோவோட் மோட்டார் திறன்களை கொண்டவை என்று அறிவிக்கப்பட்டிருந்தன.
எனினும் அவற்றின் உண்மையான திறன் 150 கிலோவோட்ஸாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது பொருந்தக்கூடிய கலால் வரியை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய வரி விதிகளின் கீழ், 100 கிலோவோட்ஸ் மின்சார வாகனத்துக்கு நேரடி வரியாக 2.4 மில்லியன் ரூபாய்கள் விதிக்கப்படுகின்றன.
விசாரணை முன்னெடுப்பு
அதே நேரத்தில் 150 கிலோவோட்ஸ் பதிப்பிற்கு 5.4 மில்லியன் ரூபாய் வரை வரி விதிக்கப்படலாம், இந்த நிலையில் குறைந்த கிலோவோட்ஸ் திறனை அறிவித்து, அதிக வரிகளைத் தவிர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து சுங்கத்திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
