சீன ஜனாதிபதி பிரான்ஸ் விஜயம்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) பிரான்ஸ் இற்கு தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் நேற்று (05.04.2024) பிற்பகல் பிரான்ஸின் ஓர்லி விமான நிலையத்தை சென்றடைந்ததன் பின்னர் அவர் தனது விஜயம் தொடர்பில் எழுத்துமூலம் தனது கருத்துக்களை சமர்ப்பித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் தனது மூன்றாவது உத்தியோகபூர்வ விஜயம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனா-பிரான்ஸ் உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் உயர் மட்ட வளர்ச்சியைப் பேணுவதுடன், விமானப் போக்குவரத்து, அணுசக்தி, விவசாயம், உணவு, பசுமை மேம்பாடு மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு புதிய முடிவுகளை எட்டியுள்ளது என்று சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள்
இந்த விஜயத்தின் போது, சீன-பிரெஞ்சு மற்றும் சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் மேம்பாடு மற்றும் தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மக்ரோனுடன் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாக ஜின்பிங் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த விஜயம் உதவும் என நம்புவதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
