தாய்வான் எல்லையில் திடீரென நிலைக்கொண்டுள்ள சீன இராணுவம்: உற்றுநோக்கும் சர்வதேசம்
அமெரிக்க ஆதரவு நாடான தாய்வானுடன் முறுகல் நிலையை நகர்த்தும் சீனா தற்போது அதன் படைகளை சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள வான் மற்றும் நீர் எல்லைகளில் நிலைநிறுத்தியுள்ளது.
சுயராஜ்யத் தீவைச் சுற்றியுள்ள நீர் மற்றும் வான்வெளியில் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனா அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
சீன இராணுவம்
தாய்வான் ஜலசந்தி, தாய்வானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீன இராணுவம் தீவிர பயிற்சில் ஈடுபட்டு வருவதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிற நிலையில் குறித்த விடயம் அச்சநிலையை உருவாக்கியுள்ளது.
இந்த விவாகரத்தில் தாய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. இந்நிலையில் தாய்வானை மிரட்டும் வகையில் அந்நாட்டை சுற்றி தீவிர போர் பயிற்சியில் சீன ஈடுபட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |