சிற்றுண்டிச்சாலைக்குள் பொலிஸ் அதிகாரியால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பிங்கிரிய சிற்றுண்டிச்சாலைக்குள் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து தகாத செயன்முறையில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிங்கிரிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த உணவகத்தை இந்த அதிகாரியே நடத்தி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
பிங்கிரிய பொலிஸ் பணிக்காக வந்த 50 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸ் கான்ஸ்டபிள் தகாத செயன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
தகாத செயன்முறை
இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவரை நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri