இலங்கைக்கு குறுகிய பயணத்தை மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர்
சீன(China) வெளியுறவு அமைச்சர் வாங் யி(Wang Yi) நேற்று ஞாயிற்றுக்கிழமை நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை(Sri lanka) நேரப்படி 02.18 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
குறுகிய பயணம்
இதன்போது,18 உறுப்பினர்களைக் கொண்ட சீனக் குழுவை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங், ஓய்வுபெற்ற விமானத் தலைவர் மார்சல் ஹர்சா அபேவிக்ரம ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இந்தநிலையில், சீன வெளியுறவு அமைச்சரும் அவரது குழுவும் இலங்கை நேரப்படி 04.23 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனவரி 5 முதல் 11 வரை நமீபியா, கொங்கோ குடியரசு, சாட் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு வாங் யி விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam