இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு சீனா துணைபோக இல்லை: விமல் வீரவன்ச(Photos)
இலங்கையில் தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சிக் கவிழ்ப்புக்களை மேற்கொள்ள சீனா ஒருபோதும் துணைபோகவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு இன்று(16) காலை வருகை தந்துள்ள சீன இராணுவத்தின் 'யுவான் வாங்-5' கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விமல் புகழாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,"சீனா எம்முடன் நீண்டகாலமாக நட்புறவைக் கொண்டுள்ளது. நாம் பொருளாதார ரீதியில் விழுந்துள்ள சந்தர்ப்பங்களிலும் எமக்கு கைகொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். நாம் எதனைச் செய்ய வேண்டும் என்று எமக்கு ஒருபோதும் சீனா அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை.
இலங்கையில் தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சிக் கவிழ்ப்புக்களை மேற்கொள்ள சீனா ஒருபோதும் துணைபோகவில்லை.
இலங்கையின் எதிர்பார்ப்பு

இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை கொண்டுள்ளது.
இந்த நிலைமையில் கடன்களை விட முதலீடுகளையே இலங்கை எதிர்பார்க்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் கடன்களை விட முதலீடுகளால் சீனா எமக்கு அதிகம் உதவும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்" என கூறியுள்ளார்.


பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri