தென்சீனக் கடலில் சீனா திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை: ஃபிலிப்பைன்ஸ் மீது குற்றச்சாட்டு
தென்சீனக் கடலில் தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை உள்ளடக்கிய வழக்கமான சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
அதேவேளை, வெளிநாடுகளுடன் இணைந்து கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அப்பகுதியின் அமைதியை ஃபிலிப்பைன்ஸ் சீர்குலைப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளைப் பீடத்தின் ஊடகப் பேச்சாளர் கேர்ணல் சாய் ஷிச்சென் இது குறித்துத் தெரிவிக்கையில், வெளிநாடுகளுடன் இணைந்து ஃபிலிப்பைன்ஸ் நடத்தும் கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தென்சீனக் கடல் பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.
சீனப் படைகள்
நாட்டின் எல்லை இறையாண்மையையும் கடல்சார் உரிமைகளையும் சீனப் படைகள் உறுதியாகப் பாதுகாக்கும் என்றும், பிராந்திய அமைதியை நிலைநிறுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தென்சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இருப்பினும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், 2016-ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் சீனாவின் இந்த உரிமைகோரலை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri