சீனாவின் சக்திவாய்ந்த இராணுவக் கப்பல்!தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா
சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலான யுவான் 5 இந்திய பெருங்கடலுக்கு அருகில் மீண்டும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் இந்திய தரப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தெற்கு எல்லையை பாதுகாக்க வேண்டியதன் காரணமாகதான் இந்தியா சீனாவிற்கு பயப்படுகின்றது என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், தொடர்ச்சியாக நெருக்கடியில் உள்ள இந்தியா, இந்து சமுத்திர பிராந்தியத்தையாவது தக்க வைக்க வேண்டிய நிலையில் உள்ளது. இலங்கையிலும் இந்தியாவால் வலுவாக காலூன்ற முடியாத நிலையில் உள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...



