அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் சீனா இணைகிறதா..! ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் புதிய தீர்மானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் இணைந்து உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பு எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள APEC மாநாட்டையொட்டி முதன்முறையாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதக் கட்டுப்பாட்டுக்கு புதிய ஒப்பந்தம்
அமெரிக்காவும் ரஷ்யாவும் இடையிலான New START அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் பெப்ரவரி மாதத்தில் காலாவதியான நிலையில், புதிய ஒப்பந்தத்தில் சீனாவையும் இணைக்க ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் தன்னை இணைத்துக்கொள்வது நியாயமற்றது என சீனா கருதுவதால், உடனடியாக புதிய ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவின் மசகு எண்ணெய் விநியோகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எண்ணெய் விலை உயர்வு சீனாவையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் வல்லரசு நாடுகள்
எனவே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா விரும்புகின்றது என்றும், இந்த சந்திப்பில் இந்த விடயம் தொடர்பிலும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுக்கின்றது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான சிப் உற்பத்தியில் இரு நாடுகளும் போட்டியிடுகின்றன. அரிய கனிம ஏற்றுமதிகள் தொடர்பாகவும் முரண்பாடுகள் உள்ளன.

வர்த்தக உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் முயற்சித்து வரும் வேளையில், இந்தச் சந்திப்பில் உக்ரைன் போர் பேசப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அமெரிக்கா, இந்த விவகாரத்தை முத்தரப்பு சந்திப்பில் எழுப்பாது என அமெரிக்க அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த சந்திப்பு உடனடியாக உலக அமைதிக்கான பெரிய ஒப்பந்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், அமெரிக்கா – சீனா – ரஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளும் ஒரே மேசையில் அமர்வது உலக அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.
Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி Manithan