மியான்மாரில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது வான்வழித் தாக்குதல் – 12 பேர் பலி
மியான்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம் மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். இன்று(14,11,2026) மாலை பொன்னாக்யுன் பகுதியில் உள்ள பியார் லா இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நீடித்து வரும் உள்நாட்டுப் போர்
உயிரிழந்தவர்களில் ஐந்து வயது சிறுவனும் அடங்குவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்துள்ளனர். பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், பொதுமக்களின் உடைமைகளும் சேதமடைந்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மாரில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரினால் ரக்கைன் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதி போர் மோதல் நடைபெறும் பகுதியாக இருக்கவில்லை என மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மியான்மாரில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததிலிருந்து அனைத்துத் தரப்புகளிலும் 100,000இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ACLED அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri