புதுக்குடியிருப்பில் ஒரு வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்
புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று (19) மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைவேலிப்பகுதியனை சேர்ந்த சியோன்ஷன் என்ற 1 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசல கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த வெட்டிய தண்ணீர்கேனில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ
இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்
குழந்தையின் உடல் மரணவிசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு