தோல்வியில் முடிந்த ஐந்து நாள் போராட்டம்:சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தற்போது இந்த சிறுவனின் மரணம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
400,000 இந்திய ரூபாய் இழப்பீடு
இந்தியாவின் மத்திய பிரதேச பகுதியில் உள்ள போபால் நகரிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெதுல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த எட்டு வயது சிறுவனின் குடும்பத்திற்கு 400,000 இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த 06ஆம் திகதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயதுச் சிறுவனை மீட்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், அச்சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
இது தொடர்பில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை
இந்த பதிவில்“பெதுலின் - மாண்ட்வி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அது பயனளிக்காமை மிகவும் கவலையளித்துள்ளது.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன், இந்த துயர நேரத்தில் குடும்பத்தினர் பலம் பெற வேண்டும் என்று நம்புகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் அவர்களுடன் உள்ளதுடன் சிறுவனின் குடும்பத்திற்கு மாநில அரசிடமிருந்து 4 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
