யாழில் பாடசாலை அதிபரினால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்
நல்லூரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
மாணவன் தாக்கப்பட்டமைக்கான காரணம்

தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது.
| யாழில் தேனீரை 10 ரூபாய்க்கும் இயற்கை முறையிலான மூலிகை உணவுகளை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் உணவகம் (Video) |
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan