யாழில் சிறுமி பாலியல் வன்கொடுமை: பெரிய தந்தை கைது
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

சிறுமியின் பெரிய தந்தை கைது
இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்று (12.08.2023) பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதுடன், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam