இந்தியாவில் பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
இந்தியாவில் (India) தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணான குமாரி என்பவர் கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அதன் போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் தெரிவித்தனர்.
இலவச பயண சலுகை
எனினும், குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட, ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில், அவருக்கு பெண் குழந்தை பிறக்க நோயாளர் காவு வண்டி மூலம் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து, ஆந்திர போக்குவரத்து பெண் ஊழியர்களுக்கு மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன், இதன் போது பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெலுங்கானா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |