ஹோட்டலின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை!
அஹுங்கல்லையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குழந்தையொன்று ஹோட்டலின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (14.05.2023) அதிகாலை பதிவாகியுள்ளது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் விடுமுறையை கழிப்பதற்காக குறித்த விடுதிக்கு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கான காரணம்
மேலும் நான்கு வயது குழந்தையே இவ்வாறு தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தை பலப்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அறையை விட்டு வெளியே வந்து மண்டபத்தில் நடந்து சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
