கசிப்பு மற்றும் மதுபான வியாபாரம்: தாயும் மகளும் கைது
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்ட பத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் அரச மதுபானங்களை விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயையும் மகளையும் கைது செய்துள்ளதுடன் கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த பகுதியிலுள்ள அருகருகே உள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டனர்.
இதன் போது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அருகிலுள்ள வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அரச மதுபானங்களைச் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை 10 கால் போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் தாயும் மகளும் எனவும் இவர்களை நீதிமன்றில்
முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri