விடுதலைப் புலிகள் அமைப்பை கூறி செம்மணியை மடைமாற்றும் பழைய இராணுவ அதிகாரிகள்
வழமைக்கு மாறாக செம்மணி விவகாரத்தில் ஶ்ரீலங்கா அரசின் அனுசரிப்பு போக்கு ஒரு சந்தேகத்தை எழுப்பினாலும் அதனை கடந்து ஒரு காழ்ப்புணர்வை கொட்டி தீர்க்கிறது.
தென்னிலங்கையின் பழைய இராணுவ முகாம்களில் நாளுக்கு நாள் தொடரும் அகழ்வுப்பணிகளில் மனங்களை ரணங்களாக்கும் முடிவுகள் கிடைக்கப்பெற்று வருகின்றது.
அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் பொறுப்புக்கூறல் தொடர்பிலான கோரிக்கைகள் தென்னிலங்கை இனவாதிகளையும் அவர்களின் ஆதரவாக வடக்கில் செயற்படுபவர்களையும் பதற வைத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தொடர்பாகவும் கொன்று புதைக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் புனைவுகளை அவிழ்த்து விடுவதுடன் அப்பட்டமான அச்ச வெளிப்பாட்டையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் இந்த விவகாரத்தில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தியதுடன் வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும்" தெரிவித்துள்ளார்
ஈழத்தமிழர் தரப்பிற்கான சர்வதேச ஆதரவுகள் தொடர்பிலும் அதனை நீர்த்துப்போகச்செய்வதில் ஶ்ரீலங்காவின் இனவாத முகங்களினதும் அவர்களின் வடக்கு ஆதரவாளர்களினதும் நகர்வுகள் தொடர்பில் ஆராய்கிறது இன்றைய அதிர்வு...

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
