2048இற்கான ரணிலின் திட்டத்தை முறியடித்த அநுர அரசாங்கம்!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வராமல், ரணில் விக்ரமசிங்கவின் கையிலேயே தொடர்ந்து ஆட்சி இருந்திருந்தால் எமது நாடு 2048இல் தான் அபிவிருத்தி அடைந்திருக்கும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2048ஆம் ஆண்டிற்காக முன்வைத்த திட்டங்களை, தற்போதைய அரசாங்கம் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தேவைகளை நாங்களே புரிந்து கொண்டோம்
அரசு ஊழியர்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கிப் போராடியதன் மூலம் ஊதிய உயர்வைப் பெறவில்லை.
ஒரு அரசாங்கமாக, நாங்கள் சூழ்நிலையை ஆராய்ந்து, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, நிவாரணம் வழங்க முடிவெடுத்தோம்.

அரசு ஊழியர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியம். மேலும் பல நிவாரணங்களையும் வழங்க வேண்டியுள்ளது. ஆனால், நம்மிடம் உள்ள வளங்களுக்குள் இருந்தே எதையும் வழங்க முடியும்.
அநுர குமார ஜனாதிபதியாக வரவில்லை என்றும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை என்றும் வைத்துக்கொள்வோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், நாடு 2048இல்தான் அபிவிருத்தி அடைந்திருக்கும்.
ஊதிய உயர்வு 2024இல்தான் கிடைத்திருக்கும். வேலைவாய்ப்புகள் 2024இல்தான் வழங்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.