பணத் தகராறில் பெண் படுகொலை! விஷம் அருந்தி தப்பியோடியவருக்கு வழியில் காத்திருந்த அதிர்ச்சி
எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹஇலுபள்ளம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(27.11.2026) அதிகாலை இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர், மஹஇலுபள்ளம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த ஆண் ஒருவர், பணம் தொடர்பான தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்தப் பின்னர், சந்தேகநபர் அந்தப் பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்லும் வழியில், காட்டு யானையுடன் மோதுண்டதில் காயமடைந்து எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் விஷம் அருந்தியிருந்ததாக தெரியவந்துள்ளது.
எப்பாவல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.